பாம்புகளை வைத்து பிரதமர் மோடியை மிரட்டிய பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்கு

செய்திகள்
Updated Sep 15, 2019 | 15:00 IST | Times Now

பிரதமர் நரேந்திர மோடியை கொல்வதாக முதலை, பாம்புகளை வைத்து வீடியோ வெளியிட்ட பிரபல பாகிஸ்தான் பாடகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 Pakistani singer Rabi Pirzada, பாகிஸ்தான் பாடகி ரபி பிர்ஸாடா
Rabi Pirzada, ரபி பிர்ஸாடா  |  Photo Credit: Twitter

லாகூர்: விஷபாம்புகள், முதலையை வைத்துக் கொண்டு பிரதமர் மோடியை மிரட்டிய பிரபல பாகிஸ்தான் பாப் பாடகி ரபி பிர்ஸாடா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரபி பிர்ஸாடா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் கையில் சில விஷ பாம்புகளை அவர் வைத்துள்ளாா். தரையில் சில மலைப்பாம்புகளும், முதலையும் கிடக்கின்றன. 

அந்த பாம்புகளோடு விளையாடும் ரபி, "நான் காஷ்மீர் பெண். நீங்கள் (மோடி) காஷ்மீர் மக்களை துன்புறுத்தி வருகிறீர்கள். இந்த பாம்புகளை எல்லாம் உங்களுக்காக நான் தயார் செய்து வைத்திருக்கிறேன். நீங்கள், நரகத்தில் இறப்பதற்கு தயாராக இருங்கள்" என்று கூறியுள்ளார். அந்த வீடியோவின் கடைசியில் காஷ்மீர் மக்களுக்காக பாடல் ஒன்றையும் பாடுகிறார். 

 

 

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி படுவேகமாக வைரலானது. இதையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு ரபி பிர்ஸாடா மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, வீட்டில் மிருகங்களை வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றமும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

NEXT STORY