கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு

செய்திகள்
Updated Jul 31, 2019 | 08:38 IST | Times Now

மலேசியா, நேபாளம், எகிப்து உள்பட உலகம் முழுவதும் கஃபே காபி டே நிறுவனத்தின் கிளையை உள்ளன. இந்த நிறுவனத்தில் பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

VG Siddhartha's body found in Netravati River
VG Siddhartha's body found in Netravati River   |  Photo Credit: BCCL

பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும் கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் இன்று காலை நேத்ராவதி ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மூத்த மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. தொழிலதிபரான இவர், நேபாளம், எகிப்து உள்பட உலகம் முழுவதும் கிளையை துவங்கியுள்ள பிரபலமான கஃபே காபி டே நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவரது நிறுவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், திங்கட்கிழமை ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு, காரில் டிரைவர் பசவராஜ் பாட்டீலுடன் சித்தார்த்தா கிளம்பியுள்ளார். பின்னர் அங்கிருந்து மங்களூர் செல்லுமாறு டிரைவரிடம் கூறிய சித்தார்த்தா, நேத்ராவதி ஆற்றின் பாலம் அருகே காரை நிறுத்தச் சொல்லிவிட்டு கீழே இறங்கியுள்ளார். டிரைவரை காரின் உள்ளேயே இருக்கும்படி கூறிச் சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதையடுத்து கார் டிரைவர் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இதற்கிடையில், அவர் நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், நேத்ராவதி ஆற்றில் திங்கட்கிழமை இரவு முதல் தக்ஷின கன்னடா போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மீனவர்கள் உள்ளிட்டோர் படகின் மூலம் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 36 மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடல் இன்று காலை நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

 

NEXT STORY
கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு Description: மலேசியா, நேபாளம், எகிப்து உள்பட உலகம் முழுவதும் கஃபே காபி டே நிறுவனத்தின் கிளையை உள்ளன. இந்த நிறுவனத்தில் பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...