பட்ஜெட் 2019: தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்!

செய்திகள்
Updated Jul 05, 2019 | 17:25 IST | Times Now

பட்ஜெட்டில் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

பட்ஜெட் 2019: தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்
பட்ஜெட் 2019: தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்  |  Photo Credit: Times Now

நாடாளுமன்ற மக்களவையில் இன்று 2019 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்...

1) ஆண்டுக்கு 400 கோடி ரூபாய்க்கும் குறைவாக தொழில் செய்யும் நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது

2) ஆண்டுக்கு 2 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. 5 கோடிக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு 22 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. 

3) 5 லட்சக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை

4) பான்கார்டு இல்லாதவர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாம்

5) மார்ச் 31, 2020 வரை 45 லட்சம் ரூபாய் வரை வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் வட்டி தள்ளுபடி

6) மின்சார வாகனங்களின் சில பாகங்களுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சார வாகனங்கள் விலை குறையும்

7) ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கும் குறைவாக தொழில் செய்யும் வியாபாரிகள் மற்றும் சிறிய கடைக்காரர்களுக்கு பென்சன் திட்டம்

8) சோப், பேஸ்ட், வாஷிங் பவுடர், மின்விசிறி, விளக்குகள், டிராவல் பேக்குகள், சானிட்டரி நாப்கின்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. 

9) பெட்ரோல்- டீசல், தங்கம்-வெள்ளி, முந்திரி பருப்பு, வாகன உதிரிபாகங்கள், செயற்கை ரப்பர், பிவிசி பைப்கள், டைல்ஸ், புகையிலைப் பொருட்கள், வெள்ளி அணிகலன்கள், சில்வர் பொருட்கள், சிசிடிவி கேமரா, உலோகத்தாலான வீட்டுப் பொருட்கள், ஸ்பீக்கர்கள், வீடியோ ரிக்கார்டர், வாகன ஒலிப்பான்கள், சிகரெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

10) இந்தியாவில் உலகத் தரம்வாய்ந்த கல்வி நிலையங்களை உருவாக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

NEXT STORY
பட்ஜெட் 2019: தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள்! Description: பட்ஜெட்டில் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola