பட்ஜெட் 2019: வருமான வரியில் என்னென்ன மாற்றங்கள்? சில முக்கிய தகவல்கள்!

செய்திகள்
Updated Jul 05, 2019 | 22:16 IST | Times Now

பட்ஜெட்டில் வருமான வரியில் என்னென்ன மாற்றங்கள் உள்ளன என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

 வருமான வரியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கு?
வருமான வரியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கு?   |  Photo Credit: Times Now

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று 2019 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பொருளாதார மந்த நிலையை சரி செய்யவும், இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்குடனும் இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். பெரிய பணக்காரர்களுக்கு அதிக வரி, வீட்டுக்கடனுக்கான வட்டியில் குறைப்பு மற்றும் வருமான வரிச் சட்டத்தில் சில மாற்றங்கள் ஆகியவை இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. வருமான வரி தொடர்பான முக்கிய தகவல்களை பார்க்கலாம்.

1) 5 லட்சக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை. இதற்கான அறிவிப்பு இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது.

2)ஆண்டுக்கு 2 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 25 சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிரிவினரின் வருமான வரி 39 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும்

 5 கோடிக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள் இனி 42.7 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும்

4) பான்கார்டு இல்லாதவர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEXT STORY
பட்ஜெட் 2019: வருமான வரியில் என்னென்ன மாற்றங்கள்? சில முக்கிய தகவல்கள்! Description: பட்ஜெட்டில் வருமான வரியில் என்னென்ன மாற்றங்கள் உள்ளன என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles