தேர்தல் 2019: பாஜகவில் இணைந்தார் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்!

செய்திகள்
Updated Apr 23, 2019 | 13:49 IST | Times Now

பிரபல பாலிவுட் நடிகரான சன்னி தியோல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தகவல்

பாஜகவில் இணைந்தார் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்
பாஜகவில் இணைந்தார் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்  |  Photo Credit: ANI

புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகரான சன்னி தியோல், யுகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் தொகுதியில் இருந்து சன்னி தியோல் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் முன்னிலையில்,  சன்னி தியோல் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார். பாலிவுட்டின் இளம் நடிகரை பாரதிய ஜனதா கட்சிக்கு வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் கட்சியில் இணைவதாக தகவல் கிடைத்தவுடன், ’பார்டர்’ திரைப்படம் எனக்கு நினைவுக்கு வந்த து. சன்னி தியோலின் தேசப்பற்ற ஒப்பற்றது என்றும் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்தார்.

சன்னி தியோலின் தந்தையும், பழம்பெரும் பாலிவுட் நடிகருமான தர்மேந்திரா கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் தொதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டார். தர்மேந்திராவின் இரண்டாவது மனைவியான நடிகை ஹேமா மாலினி, கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தமுறையும் மதுரா தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். 

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்தவாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷாவுடன், சன்னி தியோல் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இதனால், பாரதிய ஜனதா கட்சியில் சன்னி தியோல் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில், பாரதிய ஜனதா வேட்பாளராக சன்னி தியோல் போட்டியட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், அமிர்தசரஸ் தொகுதி வேட்பாளராக ஹர்தீப் சிங் புரியை பாரதிய ஜனதா அறவித்தது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சிரோன்மணி அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. சிரோன்மணி அகாலிதளம் கட்சி 10 தொகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சி குர்தாஸ்பூர், அமிர்தசரஸ் மற்றும் ஹோசியார்பூர் தொகுதியிலும் போட்டியிடுகிறது.

பாலிவுட் நடிகரான சன்னி தியோல் பார்டர், கடார், ஏக் பிரேம் கதா உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவர். குர்தாஸ்பூர் தொகுதியில் இந்தமுறை பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மே மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

NEXT STORY
தேர்தல் 2019: பாஜகவில் இணைந்தார் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்! Description: பிரபல பாலிவுட் நடிகரான சன்னி தியோல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடுவார் எனத் தகவல்
Loading...
Loading...
Loading...