அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று புதிய சாதனை படைத்த பாஜக வேட்பாளர்

செய்திகள்
Updated May 25, 2019 | 00:38 IST | Times Now

நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை பாஜக வேட்பாளருக்கு கிடைத்துள்ளது.

BJP candidate CR Patil
Representative image of CR Patil  |  Photo Credit: Twitter

குஜராத்: குஜராத் மாநிலத்தில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.ஆர். பாட்டீல் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி சாதனை படைத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் மத்தியில் ஆட்சியை பாஜக தக்க வைத்துக்கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்க உள்ளார். வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர், 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

குஜராத் மாநிலம் காந்தி நகரில் போட்டியிட்ட பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 5.57 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  இதற்கிடையில் நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை பாஜக வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் சி.ஆர். பாட்டீல் 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்துள்ளார்.  இவர் பெற்ற வாக்குகள் 9 லட்சத்து 69 ஆயிரத்து 430 ஆகும். 

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மகாராஷ்டிர மாநிலம் பீட் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரீதம் முண்டே 6 லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இதுவரை இந்திய தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.  இந்நிலையில் தற்போது குஜராத் பாரதிய ஜனதா வேட்பாளர் சி.ஆர்.பாட்டீலின் வெற்றி 2-வது மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. 

NEXT STORY
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று புதிய சாதனை படைத்த பாஜக வேட்பாளர் Description: நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை பாஜக வேட்பாளருக்கு கிடைத்துள்ளது.
Loading...
Loading...
Loading...