கர்நாடகாவில் பாஜக, கேரளாவில் காங்கிரஸ் அமோக வெற்றி!

செய்திகள்
Updated May 23, 2019 | 18:36 IST | Times Now

மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியும், கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் பெரும் வெற்றிபெறும் நிலையில் உள்ளன.

கர்நாடகாவில் பாஜக, கேரளாவில் காங்கிரஸ் அமோக வெற்றி
கர்நாடகாவில் பாஜக, கேரளாவில் காங்கிரஸ் அமோக வெற்றி  |  Photo Credit: ANI

மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியும், கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் பெரும் வெற்றிபெறும் நிலையில் உள்ளன. கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 23 இடங்களில் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 2 இடங்களிலும் வெற்றிபெறும் நிலையில் உள்ளன.

கர்நாடக மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பல்வேறு தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றது. பெங்களூரு மற்றும் முக்கிய தொகுதிகளில் பாரதிய ஜனதா வேட்பாளர் முன்னிலை பெற்றனர். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் பாரதிய ஜனதா ஆதரவுடன் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் சுமலதா வெற்றி பெற்றார். முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா அவர் தோற்கடித்தார்.

இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி சிக்பல்லாப்பூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். மற்றொரு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குல்பர்காவில் தோல்வியைத் தழுவினார்.

NEXT STORY
கர்நாடகாவில் பாஜக, கேரளாவில் காங்கிரஸ் அமோக வெற்றி! Description: மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியும், கேரளாவில் காங்கிரஸ் கட்சியும் பெரும் வெற்றிபெறும் நிலையில் உள்ளன.
Loading...
Loading...
Loading...