மேற்கு வங்க கலவரம் எதிரொலி-நாளை இரவு 10 மணியுடன் பரப்புரையை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

செய்திகள்
Updated May 15, 2019 | 20:41 IST | Times Now

பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே நிலவும் பதற்றத்தால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

india, இந்தியா
தேர்தல் ஆணையம்  |  Photo Credit: Twitter

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாளை இரவு 10 மணியுடன் அனைத்து கட்சிகளும் பரப்புரையை முடித்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளது தேர்தல் ஆணையம்.

மேற்கு வங்கத்தில் ஒன்பது மக்களவைத் தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதியன்று 7வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்நிலையில் நாளை இரவு 10 மணியுடன் பரப்புரையை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே நிலவும் பதற்றத்தால் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட பேரணியில் வன்முறை வெடித்தது. 

இறுதிகட்ட வாக்குப்பதிவை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், பாஜக தலைவர் அமித் ஷா பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தினார். பேரணியில் பாஜக தொண்டர்களுக்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

மோதலில் சமூக சேவகரான வித்யாசாகரின் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இந்த மோதல் தொடர்பாக இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. இரண்டு கட்சிகளுமே தேர்தல் ஆணையத்தில் இந்த கலவரம் தொடர்பாக புகார் அளித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம் என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY