தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டிய நபர், மின்சாரம் தாக்கி பலி - அதிர்ச்சி வீடியோ

செய்திகள்
Updated Apr 26, 2019 | 10:29 IST | Times Now

தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Man touches livewire at ksr railwaystation
Man touches livewire at ksr railwaystation  |  Photo Credit: Twitter

பெங்களூரு: மெஜஸ்டிக்கில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறிவந்த நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த புதன்கிழமை மதியம் 12:30 மணி அளவில் ஒரு முப்பது வயது ஒத்த நபர் மெஜஸ்டிக்கில் உள்ள கரந்திவீரா சங்கொலி ரயில்வே நிலையத்தில் ரயிலின் மீது ஏறி, தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியுள்ளார். உடனே கீழே நின்றிருந்தவர்கள் அவரை இறங்கச்சொல்ல, மேலே நின்றவர் கைகளை மேலே தூக்கியிருக்கிறார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மேலே இருந்த மின்கம்பிகளால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாமபாக உயிர் இழந்தார். 

இந்த சம்பவத்தை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காவல்துறை இறந்த அந்த நபர் மனநிலை சரியில்லாதவரா என்ற ரீதியிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. உயிரிழந்த அந்த நபர ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் என்று காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது. அதனால் ஆந்திரா போலீஸுக்கும் தகவல் அனுப்பபட்டு இருக்கிறது.

சென்ற மாதம்தான் இதே போல பெங்களூரு கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலும் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்ட மின்சாரம் தாக்கி எரிந்து உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

NEXT STORY
தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டிய நபர், மின்சாரம் தாக்கி பலி - அதிர்ச்சி வீடியோ Description: தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles