பங்களாதேஷ்: பாலம் இடிந்து விழுந்ததில் தடம் புரண்ட ரயில் விபத்து-5 பேர் பரிதாப பலி!

செய்திகள்
Updated Jun 24, 2019 | 22:41 IST | Times Now

பாலம் இடிந்து விழுந்ததில் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 5 பெட்டிகள் பாலத்தில் இருந்து கீழே விழுந்தன. ஒரு பெட்டி மட்டும் கால்வாய் தண்ணீருக்குள் வீழ்ந்தது.

bangladesh, பங்களாதேஷ்
ரயில் விபத்து  |  Photo Credit: Twitter

டாக்கா:  பங்களாதேஷில் பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

’உப்பாபன் எக்ஸ்பிரஸ்’ எனப்படும் இந்த பயணிகள் விரைவு ரயில் தலைநகர் டாக்காவில் இருந்து வடகிழக்கில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி விரைந்து சென்றுகொண்டிருந்தது. டாக்காவில் இருந்து 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள குலாவ்ரா பகுதியின் மேம்பாலத்தின் மீது ரயில் சென்றபோது அந்தப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுஃதது. 

பாலம் இடிந்து விழுந்ததில் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 5 பெட்டிகள் பாலத்தில் இருந்து கீழே விழுந்தன. ஒரு பெட்டி மட்டும் கால்வாய் தண்ணீருக்குள் வீழ்ந்தது. இந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

மேலும், 100க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் சில்ஹெட் பகுதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தினால் தற்காலிகமாக வடகிழக்கு பகுதிக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்த விபத்து குறித்து தெரிவித்த காவல்துறை உயரதிகாரி முகமது ஷாஜலால், மீட்புப்பணிக்கு பிறகே மொத்த உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் எனத் தெரிகிறது,

NEXT STORY
பங்களாதேஷ்: பாலம் இடிந்து விழுந்ததில் தடம் புரண்ட ரயில் விபத்து-5 பேர் பரிதாப பலி! Description: பாலம் இடிந்து விழுந்ததில் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 5 பெட்டிகள் பாலத்தில் இருந்து கீழே விழுந்தன. ஒரு பெட்டி மட்டும் கால்வாய் தண்ணீருக்குள் வீழ்ந்தது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola