கடலில் கரைந்துவிடுமா டைட்டானிக்? ஆராய்ச்சியில் திடுக்கிடும் தகவல்

செய்திகள்
Updated Aug 25, 2019 | 20:15 IST | Times Now

அடுத்த 30 ஆண்டுகளுக்குள் டைடானிக் கப்பல் இருந்த இடம் தெரியாமல் முழுவதுமாக மறைந்துவிடுமாம்

Titanic, டைட்டானிக் கப்பல்
டைட்டானிக் கப்பல்  |  Photo Credit: YouTube

உலகின் மிகவும் பிரபலமான கப்பலாக அறியப்படுவது டைட்டானிக். ஏப்ரல் 1912-ல் அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் இருந்து தனது கன்னிப் பயணத்தை மேற்கொண்ட டைட்டானிக் கப்பல், பனிப்பாறையில் மோதி கவிழ்ந்த வரலாறு உலகறிந்தது. அன்று முதல் கடற்படுகையை தனது நிரந்தர இருப்பிடமாக்கிக் கொண்டது டைட்டானிக். 1,500-க்கும் மேற்பட்டோர் இந்த கொடூர விபத்தில் பலியாகினர்.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் குறித்து அறிவியலாளர்கள் பலரும் ஆராய்ச்சி செய்தனர். இருப்பினும், 2005-க்கு பிறகு குறிப்பிடத்தக்க எந்த ஆய்வும் நடக்கவில்லை. கடந்த 14 ஆண்டுகளில் எவரும் கடலுக்கு அடியில் சென்று டைட்டானிக் கப்பலை பார்க்கவில்லை. இந்நிலையில், ஆழ்கடல் ஆய்வாளர் விக்டர் வெஸ்கோவோ என்பவர் தனது குழுவுடன் கடற்படுகைக்கு சென்று டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்துள்ளார். ஐந்து பேர் கொண்ட இக்குழு எட்டு நாட்கள் மேற்கொண்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

அடுத்த 30 ஆண்டுகளுக்குள் டைட்டானிக் கப்பல் இருந்த இடம் தெரியாமல் முழுவதுமாக மறைந்துவிடும். ’ஹலோமொனோஸ் டைடானிகே’ எனும் பாக்டீரியா டைட்டானிக் கப்பலின் இரும்புப் பாகங்களை உண்பதால் ஏற்படும் அறிப்பே இதற்கு காரணம் என்று கூறுகிறார், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஹென்ரியட்டா மான்.

டைட்டானிக் கப்பலை பாக்டீரியாக்கள் அடுக்கடுக்காக உண்டு வருவதாக அவர் கூறியுள்ளார். எவ்வளவு காலத்திற்குள் கப்பல் முழுவதுமாக மறைந்துவிடும் என்பதை துல்லியமாகக் கூறிமுடியாது என்றாலும் 30 ஆண்டுகளுக்கு மேல் கப்பல் நிலைத்திருக்க வாய்பில்லை என்கிறார் ஹென்ரியட்டா  மான். ஜேம்ஸ் கேம்ரூன் திரைப்படத்தில் இடம்பெற்ற டைட்டானிக் மட்டுமே இனி வரலாற்றில் இருக்கும் போல!

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...