மக்கள் தொகையை கட்டுப்படுத்த ராம் தேவ் சொன்ன யோசனையால் சர்ச்சை!

செய்திகள்
Updated May 27, 2019 | 12:28 IST | Times Now

நாடு முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும் என யோகா குரு பாபா ராமதேவ் கூறியுள்ளார்.

Baba Ramdev, பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்  |  Photo Credit: IANS

ஹரித்துவார்: இந்தியாவின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை அளிக்க கூடாது என பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

இந்தியாவின் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டுமானல் இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அப்படி பெற்றுக்கொண்டால் மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை இல்லை என என சட்டம் கொண்டுவரவேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் யோசனை தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராம்தேவ் கூறியதாவது: இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில் 150 கோடியாக அதிகரிப்பதை தடுக்க வேண்டும். இதற்கு ஒரே வழி, இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது. அப்படி பெற்றுக்கொண்டால் மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை ரத்து என சட்டம் கொண்டு வரவேண்டும். அவ்வாறு செய்தால் தான் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முடியும். இப்படி ஒரு சட்டம் அரசால் இயற்றப்பட்டால் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதிக குழந்தைகளை பெற்றெடுக்கமாட்டார்கள். 

இதேபோல் பசுக்கள் கொல்லப்படுவதை முழுவதுமாக தடை செய்ய வேண்டும். இதன் மூலம் பசுக்கொள்ளையர்களுக்கும் பசு பாதுகாவலர்களுக்கும் இடையேயான மோதலை தடுக்கமுடியும். மேலும், இஸ்லாமிய நாடுகளில் மது முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளால் முடியும் போது இந்தியாவில் மட்டும் ஏன் தடை செய்ய முடியவில்லை. நாடு முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  
 

NEXT STORY
மக்கள் தொகையை கட்டுப்படுத்த ராம் தேவ் சொன்ன யோசனையால் சர்ச்சை! Description: நாடு முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும் என யோகா குரு பாபா ராமதேவ் கூறியுள்ளார்.
Loading...
Loading...
Loading...