பாஜக தலைமையகத்தில் அருண் ஜெட்லியின் உடல்; இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது

செய்திகள்
Updated Aug 25, 2019 | 17:42 IST | Times Now

இன்று காலை பாஜக தலைமையகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டுவரப்படு, தலைமையகத்தில் அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

Arun Jaitley's mortal remains being taken to BJP headquarters, பாஜக தலைமையகத்திற்கு கொண்டுசெல்லப்படும் அருண் ஜெட்லியின் உடல்
பாஜக தலைமையகத்திற்கு கொண்டுசெல்லப்படும் அருண் ஜெட்லியின் உடல்  |  Photo Credit: ANI

புது டெல்லி: மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது. முன்னதாக, பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் அஞ்சலிக்காக பாஜக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

“பாஜக தலைமையகத்தில் இருந்து தொடங்கும் இறுதி ஊர்வலம் நிகம்போத் காட் பகுதி வரைச் சென்று அங்கு அவரது இறுச்சடங்குகள் மேற்கொள்ளப்படும்,” என்றார் பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா.

மூச்சுத்திணறல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி, சனிக்கிழமை மதியம் 12:07 மணிக்கு உயிரிழந்தார். பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லிக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. உடல்நிலை காரணமாக 2019 மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

இன்று காலை 10:30 மணியளவில் தீன தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் உள்ள பாஜக தலைமையகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டுவரப்படுள்ளது. இதனையொட்டி, பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது. பின்னர், அங்கிருந்து இறுதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு யமுனா நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் பகுதியில் இறுதிச்சடங்குகள் நடைபெறும்.

 

 

புது டெல்லியின் கைலாஷ் காலனியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். முன்னதாக, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா, ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியின் தலைவர் அஜித் சிங் உள்ளிட்டோர் அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...