அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

செய்திகள்
Updated Aug 25, 2019 | 17:40 IST | Times Now

இறுதிச்சடங்கில் கவுதம் கம்பீர், அரவிந்த் கெஜரிவால், எல்.கே. அத்வானி, எடியூரப்பா, நிர்மலா சீதாராமன், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியேர் பங்கேற்றனர்.

Arun Jaitley's mortal remains cremated, அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது
அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது  |  Photo Credit: Twitter

புது டெல்லி: சனிக்கிழமை அன்று உயிரிழந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் நிகம்போத் காட் பகுதியில் இன்று தகனம் செய்யப்பட்டது. அருண் ஜெட்லியின் மகன் ரோஹன் ஜெட்லி தனது தந்தைக்கு ஈமச்சடங்குகளை செய்து வைத்தார். 

முன்னதாக, இன்று காலை அருண் ஜெட்லியின் இல்லத்திலிருந்து கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டது. பிறகு, அங்கிருந்து ஊர்வலமாக நிகம்போத் காட் பகுதிக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதல்வர் ஷிவராஜ் சிங் சவுகான், சந்திரபாபு நாயுடு, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் ஆகியோர் பாஜக தலைமையகத்தில் அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

 

நிகம்போத் காட் பகுதியில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் மக்களவை உறுப்பினர் கவுதம் கம்பீர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால், டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியேர் பங்கேற்றனர்.

மூச்சுத்திணறல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருண் ஜெட்லி, சனிக்கிழமை மதியம் 12:07 மணிக்கு உயிரிழந்தார். பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அருண் ஜெட்லிக்கு

கடந்த மே மாதம் நடைபெற்ற சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை மேலும் மோசமடைந்தது. 2019 மக்களவைத் தேர்தலிலும் உடல்நிலை காரணம் காட்டி அருண் ஜெட்லி போட்டியிடவில்லை.

NEXT STORY
அருண் ஜெட்லியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் Description: இறுதிச்சடங்கில் கவுதம் கம்பீர், அரவிந்த் கெஜரிவால், எல்.கே. அத்வானி, எடியூரப்பா, நிர்மலா சீதாராமன், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியேர் பங்கேற்றனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles