அப்போலோ மருத்துவமனைக்கு 3000 கோடி ரூபாய் கடன், சொத்துகளை விற்க முயற்சி?

செய்திகள்
Updated Jul 18, 2019 | 13:41 IST | Times Now

அப்போலோ மருத்துவனைக்கு கடன் சுமை அதிகரித்துள்ளதால் அந்த நிறுவனம் சொத்துக்களை விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Apollo Hospitals
அப்போலோ மருத்துவமனை  |  Photo Credit: Twitter

அப்போலோ மருத்துவமனைக்கு ரூபாய் 3000 கோடிக்கும் மேல் கடன் சுமை இருப்பதால் அப்போலோ  நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்க தற்போது அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

1983-ஆம் ஆண்டு மருத்துவர் பிரதாப் சந்திரா ரெட்டி அப்போலோ மருத்துவமனையை தொடங்கினர். சென்னையை தலைமையகமான கொண்ட இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது. தற்போது ரெட்டியின் குடும்பத்தினர் இதனை நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த நிறுவனம் 3000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் சுமையில் சிக்கியுள்ளது. எனவே தங்களுக்கு சொந்தமான 13 செவிலியர் கல்லூரிகள் மற்றும் 2 மருத்துவ கல்லூரிகளை விற்க அந்த நிறுவனம் முடிவுசெய்துள்ளதாக லைவ்மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

பிரதாப் சந்திரா ரெட்டியின் மகளும் அப்போலோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சுனிதா ரெட்டி இதனை பற்றி கூறியபோது தங்களுக்கு கடன் கொடுத்த நிறுவங்களுக்கு தங்கள் நிறுவனத்தின் பங்குகளை அடமானமாக வைத்துள்ளதாகவும், 78 சதவீதமாக உள்ள அடமான பங்குகளை 20 சதவீதமாக குறைக்கு முயற்சித்து வருவதாகவும் கூறினார்.மேலும் பல முதலீட்டாளர்கள் தங்கள் நிறுவனத்திடம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  

அப்போலோ நிறுவனம் தங்களுக்கு சொந்தமான இந்த சொத்துகளை விற்கும் பட்சத்தில் கடன் சுமை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த நிறுவனம் சென்ற மாதம் அப்போலோ முனிச் காப்பீட்டில் தங்களுக்கு சொந்தமான பங்குகளை ஹச்.டி.எஃப்.சி நிறுவனத்திற்கு விற்றது குறிப்பிடத்தக்கது.              
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...