இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானம்.. மடக்கி பிடித்த இந்திய போர் விமானங்கள்

செய்திகள்
Updated May 10, 2019 | 20:55 IST | Times Now

இந்திய வான் எல்லையான வடக்கு குஜராத் பகுதிக்குள் இன்று அனுமதியின்றி பாகிஸ்தான் வழியாக வந்த விமானம் நுழைந்துள்ளது கண்டறியப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.

Antonov AN-12 heavy cargo plane, அன்டோனோவ் ஏஎன் 12
Antonov AN-12 heavy cargo plane  |  Photo Credit: Times Now

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த ஜார்ஜியா நாட்டு விமானத்தை இந்திய விமானப்படை விமானம் இடைமறித்து தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய வான் எல்லையான வடக்கு குஜராத் பகுதிக்குள் இன்று மதியம் 3.15 மணிக்கு அனுமதியின்றி ஒரு விமானம் நுழைந்துள்ளது. இதை கண்டறிந்த இந்திய விமானப்படை அதிகாரிகள் உடனடியாக விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை அனுப்பி அந்த விமானத்தை நடுவானில் இடைமறித்தனர்.

இதையடுத்து அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது. விசாரணையில், ஜார்ஜியா அன்டோனோவ் ஏஎன் 12 வகையைச் சேர்ந்த சரக்கு விமானம் தான் அது என்பதும், அந்த விமானம் கராச்சியிலிருந்து டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தது என்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விமானத்தில் இருந்த பைலட்டிடம் இந்திய விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஜார்ஜியா நாட்டின் ட்பிலிசி நகரில் இருந்து கராச்சி வழியாக டெல்லி சென்று கொண்டிருந்ததாக பைலட் தெரிவித்துள்ளார். இருப்பினும் வான்வழித் தடத்தை மாறி இந்திய எல்லைக்குள் விமானம் நுழைந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

NEXT STORY
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானம்.. மடக்கி பிடித்த இந்திய போர் விமானங்கள் Description: இந்திய வான் எல்லையான வடக்கு குஜராத் பகுதிக்குள் இன்று அனுமதியின்றி பாகிஸ்தான் வழியாக வந்த விமானம் நுழைந்துள்ளது கண்டறியப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles