புல்வாமாவில் ராணுவப்படையினரின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்!

செய்திகள்
Updated Jun 17, 2019 | 21:55 IST | Times Now

புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று சி.ஆர்.பி.எஃப் படையினர் பயணம் செய்த பேருந்துகள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டத்தில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

Jammu kashmir, ஜம்மு காஷ்மீர்
மீண்டும் புல்வாமா தாக்குதல்   |  Photo Credit: ANI

புல்வாமா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் ராணுவத்தினரை மீண்டும் குறிவைத்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புல்வாமா, அரிஹால் என்கிற கிராமத்தில் ராணுவப் படை வீரர்களின் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த ராணுவ கவச வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. மேலும், 9 படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்.

 

 

புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று சி.ஆர்.பி.எஃப் படையினர் பயணம் செய்த பேருந்துகள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டத்தில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இந்நிலையில், தீவிரவாதிகளின் இந்த தாக்குதலின் நோக்கம் நிறைவேறவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது. 
ராணுவப் படையினர் பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் தவிர வேறு அசம்பாவிதம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முற்றுகையிடப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
புல்வாமாவில் ராணுவப்படையினரின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்! Description: புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று சி.ஆர்.பி.எஃப் படையினர் பயணம் செய்த பேருந்துகள் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டத்தில் 40 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola