ஆந்திரா: கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து; சுற்றுலா சென்ற 11 பேர் பலி

செய்திகள்
Updated Sep 15, 2019 | 18:02 IST | Times Now

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 61 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tourist boat capsizes in Godavari river
Tourist boat capsizes in Godavari river  |  Photo Credit: ANI

தேவிபட்டணம்: ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமானவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி அருகே உள்ள கண்டி போச்சம்மாள் கோவில் பகுதியில் இருந்து 50 சுற்றுலா பயணிகள், படகு ஊழியர்கள் 11 பேர் என மொத்தம் 61 பேர் படகு ஒன்றில் கோதாவரி ஆற்றில் பயணம் மேற்கொண்டனர். ஆற்றில் படகு கச்சளூரு பகுதியில் வந்துகொண்டிருந்த போது நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படகில் பயணம் செய்த 61 பேரில் 28 பேர் நீந்தி கரை வந்து சேர்ந்தனர். மீதமுள்ளவர்கள் தண்ணீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், போலீாசார் நீரில் மூழ்கியவர்களை தேடி வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரியில் இருந்து வந்துள்ள இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது. கடற்படை ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

படகில் சென்றவர்கள் ஹைதராபாத், குண்டூர், விஜயவாடா, விசாகபட்டினம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றியதால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. படகு விபத்தை தொடர்ந்து கோதாவரி ஆற்றில் அனைத்து படகு சேவைகளையும் ரத்து செய்யுமாறு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். படகு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.


 

NEXT STORY