காணாமல் போன ஏ.என்.32 ரக விமான பாகங்கள் - அருணாச்சல பிரதேசம் அருகில் கண்டுபிடிப்பு

செய்திகள்
Updated Jun 11, 2019 | 17:36 IST | Times Now

அஸ்ஸாமின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து ஏ.என்.32 என்கிற போக்குவரத்துப் பயன்பாட்டு விமானம், அருணாச்சல பிரதேச மாநிலம் மெசுகாவில் உள்ள ராணுவத் தளத்திற்கு புறப்பட்டு சென்றது.

an 32, ஏஎன்32
மாதிரிப்படம்  |  Photo Credit: Twitter

இடாநகர்: அஸ்ஸாமில் இருந்து புறப்பட்டு மாயமான விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரம் 3ம் தேதியன்று, அஸ்ஸாமின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து ஏ.என்.32 என்கிற போக்குவரத்துப் பயன்பாட்டு விமானம், அருணாச்சல பிரதேச மாநிலம் மெசுகாவில் உள்ள ராணுவத் தளத்திற்கு புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்தில் 8 விமானப்பணியாளர்களும், 5 பயணிகளும் பயணித்தனர். இந்நிலையில் விமானம் புறப்பட்ட 35 நிமிடங்களிலேயே ரேடார் கண்காணிப்பில் இருந்து மறைந்ததுடன், விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தனது தொடர்பையும் இழந்தது. 

 

 

மாயமான ஏ.என் 32வை தேடும் பணியில் சுகோய் 30 மற்றும் சி 130 ஆகிய விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் காணாமல் போன ஏ.என் 32 போர் விமானம் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சியாங் மாவட்டம், கட்டி என்னும் கிராமம் அருகே விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதில் யாரேனும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது. 

NEXT STORY
காணாமல் போன ஏ.என்.32 ரக விமான பாகங்கள் - அருணாச்சல பிரதேசம் அருகில் கண்டுபிடிப்பு Description: அஸ்ஸாமின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து ஏ.என்.32 என்கிற போக்குவரத்துப் பயன்பாட்டு விமானம், அருணாச்சல பிரதேச மாநிலம் மெசுகாவில் உள்ள ராணுவத் தளத்திற்கு புறப்பட்டு சென்றது.
Loading...
Loading...
Loading...