இந்தி குறித்த எனது கருத்து தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது - சர்ச்சைகளுக்கு அமித்ஷா விளக்கம்!

செய்திகள்
Updated Sep 18, 2019 | 19:15 IST | Times Now

இந்தி குறித்த தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக சர்ச்சைகளுக்கு அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

இந்தி திணிப்பு சர்ச்சைக்கு அமித்ஷா விளக்கம், Amit Shah clarification on Hindi Imposition Controversy
இந்தி திணிப்பு சர்ச்சைக்கு அமித்ஷா விளக்கம்  |  Photo Credit: ANI

இந்தி நாட்டின் ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததால் எழுந்த சர்ச்சைகளுக்கு, தற்போது அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழியை பற்றி பேசியது பெரும் சர்ச்சையானது. மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும் என்று பதிவிட்டிருந்தாா். அவரது இந்த கருத்துக்காக கடும் கண்டங்கள் எழுந்தது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழி திணிக்கப்படுவதாக எதிர்ப்பு கிளம்பியது. 

இந்நிலையில் இன்று சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக  அமித்ஷா நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று தான் கூறவில்லை என்றும், அவரது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் தெரிவித்தார். இந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் தான் சொன்னதில்லை என்றும் தங்கள் தாய்மொழியுடன் சேர்ந்து இந்தி மொழியையும் கற்றுக்கொள்ளவே கூறியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதை பலர் அரசியல் ஆகிவிட்டதாகவும் அவர் கூறினார்.

 

 

அமித்ஷா தானும் இந்தி பேசாத மாநிலமான குஜராத்தில் இருந்து வருவதாகவும், இந்திய மொழிகளை வலிமைப்படுத்தவே அவ்வாறு கருத்து கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மொழிகளை வலைமைப்படுத்த தவறினால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போல நமது மொழி எதுவென்று தெரியாமலே போய்விடும் என்று அவர் குறிப்பிட்டார்.     
      
 


      
 
 

NEXT STORY