கர்நாடகா: இக்கட்டான சூழலில் ஜூலை 9-ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்

செய்திகள்
Updated Jul 07, 2019 | 22:37 IST | Times Now

நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறும் என்றும் அதற்கு கட்டாயம் அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்

Siddaramaiah
Siddaramaiah  |  Photo Credit: ANI

இந்தியாவில் எந்த மாநிலமென்றாலும் கூட்டணி ஆட்சி என்றாலே குழப்பம்தான். ஒவ்வொரு நாளையும் கத்தி முனையில் நடப்பதைப் போன்றுதான் கடத்த வேண்டியிருக்கும். இந்த முறை கத்தி முனையில் நின்றுகொண்டிருப்பது கர்நாடகா அரசு. ஐக்கிய ஜனதா தளமும் காங்கிரஸும் கூட்டணி சேர்ந்து ஆட்சி நடத்தி வரும் கர்நாடகாவில் இப்போது புதிய திருப்பம். கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத 12 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் தந்துவிட்டு மாநிலத்தைவிட்டு எஸ்கேப் ஆகியிருக்கிறார்கள். அவர்கள் மும்பையில் ஒரு நட்சத்திய விடுதியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இவர்களை பாஜக தான் மறைத்து வைத்துள்ளதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அமெரிக்காவில் இருந்து தற்போது பெங்களூருவுக்கு வந்துவிட்டார். இந்த ராஜினாமா விஷயத்தில் எங்களுக்கு ஒரு சம்பந்தமும் இல்லை என்றும் இதனை சபாநாயகர் தான் முடிவெடுக்க வேண்டுமென்றும் முன்னாள் முதலமைச்சரும் கர்நாடக பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார். இப்போது கர்நாடக அரசியலில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டபின் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறும் என்றும் அதற்கு கட்டாயம் அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்படி பங்கேற்காத எம்.எல்.ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

NEXT STORY
கர்நாடகா: இக்கட்டான சூழலில் ஜூலை 9-ஆம் தேதி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் Description: நாளை மறுநாள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெறும் என்றும் அதற்கு கட்டாயம் அனைத்து எம்.எல்.ஏக்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola