ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் விற்கும் முயற்சிகள் அடுத்த மாதம் தொடக்கம்

செய்திகள்
Updated Oct 09, 2019 | 16:03 IST | Times Now

ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் தனியாரிடம் விற்க அரசு முடிவேடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவாரத்தை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.

ஏர் இந்தியாவை விற்கும் முயற்சிகள் அடுத்த மாதம் தொடக்கம்,Air India privatisation to start from November
ஏர் இந்தியாவை விற்கும் முயற்சிகள் அடுத்த மாதம் தொடக்கம்  |  Photo Credit: Twitter

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் விற்கும் முயற்சிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது. தற்போது அந்நிறுவனத்திற்கு ரூ.74,000 கடன் உள்ளது. இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தால் இதனை தனியாரிடம் விற்க சென்ற ஆண்டு முயற்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது நிறுவனத்தில் அரசு 24% பங்குகளை வைத்துக்கொள்ளும் என்றும் கடனில் ரூ.33,000 கோடியை தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் இருந்து தனியார் நிறுவனங்கள் பின்வாங்கியது.  

இந்நிலையில் தற்போது தனது முடிவை மாற்றி ஏர் இந்தியா நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்க அரசு முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் இதற்கான பேச்சுவார்த்தைகள் மீண்டும் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ், இன்டெர்க்ளோப் ஏவியேஷன் உள்ளிட்ட பல தனியார் நிறுவங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...