அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு?! - லண்டனில் அவசர தரையிறக்கம்

செய்திகள்
Updated Jun 27, 2019 | 16:19 IST | Times Now

லண்டன் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று விமானத்துக்குள்  வெடிகுண்டு இருப்பதாக விமான ஊழியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

london, லண்டன்
ஏர் இந்தியா விமானம்  |  Photo Credit: ANI

லண்டன்: மும்பையில் இருந்து அமெரிக்காவிற்கு பறந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

லண்டன் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று விமானத்துக்குள்  வெடிகுண்டு இருப்பதாக விமான ஊழியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதையடுத்து லண்டன் விமான நிலையத்துக்கு விமானிகள் தகவல் அளித்தனர். பின்னர் இரண்டு ஜெட் விமானங்கள் பாதுகாப்புடன் லண்டன் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. மேலும், விமானத்தில் வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பது குறித்தும் சோதனைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
அமெரிக்கா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு?! - லண்டனில் அவசர தரையிறக்கம் Description: லண்டன் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென்று விமானத்துக்குள்  வெடிகுண்டு இருப்பதாக விமான ஊழியர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles