அமைச்சர் பதவி கிடைக்காட்டி என்ன? ஆந்திர அரசின் முக்கியத்துறையின் தலைவரானார் ரோஜா!

செய்திகள்
Updated Jun 12, 2019 | 19:27 IST | Times Now

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

Andhra, ஆந்திரா
ஜெகன்மோகனுடன் ரோஜா  |  Photo Credit: Twitter

ஹைதராபாத்: ஆந்திர அரசியலில் முக்கிய நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகை ரோஜாவிற்கு அமைச்சரவைக்கு பதிலாக மற்றொரு முக்கிய துறையின் பொறுப்பாக ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதனைத் தொடர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆரவாரமாக ஆந்திர முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 

தொடர்ந்து அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முக்கிய நபர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும், 5 துணை முதல்வர்களும் அறிவிக்கப்பட்டனர். 25 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். ஒரு மாநிலத்திற்கு 5 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டது இந்திய அரசியலில் இதுவே முதல்முறை.

இந்நிலையில், அமைச்சரவையில் மூத்த தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனால் கட்சியின் வெற்றிக்கு முழுமூச்சுடன் பாடுபட்ட எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜாவிற்கு பதவி அளிக்கப்படவில்லை. இதனால் ரோஜா தரப்பு வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் இந்த ஆட்சிக்கான முதல் சட்டமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர அரசின் முக்கிய துறையில் ரோஜா இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY