’அதே எண்..அதே கிழமை..அதே மாதம்..அதே எண்ணிக்கை’ - 2009லும் ஒரு ஏ.என்.32 விமான விபத்து!

செய்திகள்
Updated Jun 11, 2019 | 22:49 IST | Times Now

கடந்த 3ம் தேதி திங்கட்கிழமையன்று அசாமிலிருந்து 13 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஏ.என்.32 விமானம் மாயமானது.

indian army, இந்திய ராணுவம்
இந்திய விமானப்படையின் ஏ.என்.32 விமானம்  |  Photo Credit: PTI

கவுகாத்தி: அசாமிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஏ.என்.32 ரக விமானத்தின் உடைந்த பாகங்கள் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் கண்டறியப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்ற நிலையில் இதே போன்ற சம்பவம் கடந்த 2009ம் ஆண்டும் நிகழ்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3ம் தேதி திங்கட்கிழமையன்று அசாமிலிருந்து 13 பேருடன் மெச்சூங் நோக்கி புறப்பட்டுச் சென்ற ஏ.என்.32 விமானம் மாயமானது. இந்நிலையில் அதன் உடைந்த பாகங்கள் அருணாச்சல பிரதேச மாநிலம், சியாங் மாவட்டத்தில் கட்டி என்ற கிராமம் அருகே கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வரலாற்றில் 10 வருடங்களுக்கு முன்பு இதேபோன்று விமானப்படையைச் சேர்ந்த விமானம் ஏ.என்.32, ஜூன் மாதம் 2009ம் வருடம், ஒரு திங்கட்கிழமையில் மாயமானது. அந்த விமானமும் அருணாச்சல பிரதேசத்தின், மெச்சூங் நோக்கி சென்றது. அதிலும் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இந்நிலையில் அப்போது நடைபெற்ற தேடுதல் வேட்டையில், தற்போது சியாங் அருகே ஏ.என்.32 உதிரி பாகங்கள் கண்டறியப்பட்டது போலவே அதே சுற்றளவில் 25 கிலோமீட்டர் தொலையில் அந்த வருடமும் உடைந்த ஏ.என்.32வின் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்திருந்தனர். 2009ம் வருடம் காவல்துறை அதிகாரியாக இருந்த ஹெச்.லேனின் இது குறித்து தெரிவித்திருந்தார். இந்த முறை போலவே 2009ம் ஆண்டிலும் வானிலை ஒத்துழைக்காதது தேடுதலை தாமதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஒரு ஏ.என்.32 விமான விபத்து நடந்திருப்பது ஆக்‌ஷன் ரீப்ளே போல அனைவரையும் ஆச்சரியம் கலந்த அச்சத்திற்கு உள்ளாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், ஜூலை 22, 2016ம் ஆண்டிலும் ஒரு ஏ.என்.32 ரக விமானம் ஒன்று சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டு சென்று மாயமானது குறிப்பிடத்தக்கது. அதில் பயணித்த 29ம் பேரும் யூகத்தின் அடிப்படையிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த விமானம் குறித்த தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

NEXT STORY
’அதே எண்..அதே கிழமை..அதே மாதம்..அதே எண்ணிக்கை’ - 2009லும் ஒரு ஏ.என்.32 விமான விபத்து! Description: கடந்த 3ம் தேதி திங்கட்கிழமையன்று அசாமிலிருந்து 13 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஏ.என்.32 விமானம் மாயமானது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles