'இந்தியா ஜெயிக்கணும் அரோகரா’-உலகக் கோப்பைக்காக வாரணாசியில் ஒரு ஸ்பெஷல் பூஜை!

செய்திகள்
Updated Jun 16, 2019 | 12:28 IST | Times Now

இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

world cup, உலகக்கோப்பை
வாரணாசி பூஜை  |  Photo Credit: ANI

இங்கிலாந்து: உலகக்கோப்பைத் தொடரில் இன்று பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்திய அணி. இந்நிலையில், இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என சிறப்பு பூஜைகளை நடத்தியுள்ளனர் இந்திய அணி ரசிகர்கள். 

இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மான்செஸ்டரில் நடைபெறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விறுவிறுப்பாக காலி. 

 

 

இதுவரையில் பாகிஸ்தான் அணியிடம், இந்திய அணி தோல்வியைத் தழுவியதில்லை. அதனால், இன்றைய ஆட்டத்தில் பொறி பறக்கும் என்று தெரிகிறது. இருந்தாலும் மழை வராமல் இருந்தால் மட்டுமே போட்டி நடைபெறும் என்கிற சூழலும் நிலவுகிறது.

இதற்கிடையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் சிறப்பு பூஜைகளும், கங்கை நதிக்கு சிறப்பு ஆரத்தி வழிபாடும் அப்பகுதி ரசிகர்களால் நடத்தப்பட்டுள்ளது. 

NEXT STORY
'இந்தியா ஜெயிக்கணும் அரோகரா’-உலகக் கோப்பைக்காக வாரணாசியில் ஒரு ஸ்பெஷல் பூஜை! Description: இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola