கேரளாவில் வாக்குப்பதிவில் ‘பாம்பு’ - அலறியடித்து ஓடிய பொதுமக்கள்!

செய்திகள்
Updated Apr 23, 2019 | 14:39 IST | Times Now

வாக்களிக்க வந்த ஒருவர் ஒப்புகை சீட்டு மெஷினுக்குள் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட ஆரம்பித்துள்ளார்.

election 2019, தேர்தல் 2019
விவிபேட்  |  Photo Credit: Twitter

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரில் வாக்களிக்கும் சாவடியில் விவிபேட் எனப்படும் ஒப்புகை சீட்டு மெஷினுக்குள் பாம்பு இருந்ததால் வாக்களிக்க வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில் கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் உட்பட கேரள மக்கள் ஆர்வத்துடன் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில், கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டகை என்னும் நகரில் அமைந்துள்ள வாக்குச்சாவடி ஒன்றில் மக்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காந்திருந்துள்ளனர். அப்போது, வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு மெஷினில் இருந்து வினோதமான சப்தம் எழுந்துள்ளது. கூடவே, மெஷினும் ஆடிக்கொண்டே இருந்துள்ளது.

அப்போது, வாக்களிக்க வந்த ஒருவர் ஒப்புகை சீட்டு மெஷினுக்குள் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட ஆரம்பித்துள்ளார்.

அதைக் கேட்டதும், வாக்களிக்க வந்திருந்த பொதுமக்களும், தேர்தல் நடத்தும் அலுவலர்களும் அலறியடித்து ஓடினர். அதன்பிறகு, காவல்துறை அதிகாரிகள் வந்து மெஷினுக்குள் இருந்த பாம்பினை வெளியே எடுத்து காட்டுப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். 

அதன்பிறகு அவ்வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

NEXT STORY
கேரளாவில் வாக்குப்பதிவில் ‘பாம்பு’ - அலறியடித்து ஓடிய பொதுமக்கள்! Description: வாக்களிக்க வந்த ஒருவர் ஒப்புகை சீட்டு மெஷினுக்குள் பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட ஆரம்பித்துள்ளார்.
Loading...
Loading...
Loading...