உலகின் அரிதான ‘யாங்ட்ஷி’ மெல்லுடலி பெண் ஆமை உயிரிழப்பு!

செய்திகள்
Updated Apr 15, 2019 | 23:11 IST | Times Now

பெண் ஆமை இறந்தநிலையில் இன்னும் ஒரு ஆண் ஆமை மட்டுமே ஷூஷோ என்னும் சீன விலங்கியல் பூங்காவில் உள்ளது.

china, சீனா
சீனாவின் அரியவகை ஆமை  |  Photo Credit: Twitter

பெய்ஜிங்: சீனாவில் பாதுகாக்கப்பட்டு வந்த உலகின் அரிதான வகையைச் சேர்ந்த மெல்லிய ஓடு கொண்ட ஆமையினத்தின் கடைசி பெண் ஆமையும் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

’யாங்ட்ஷி’ என்று அழைக்கப்படும் இந்தவகை மெல்லிய மேல் ஓடு கொண்ட ஆமைகள் சீனாவில் மட்டுமே காணப்படும் ஒரு அரிய வகை ஆமையினமாகும். மனிதர்களின் வரைமுறையற்ற வேட்டை, நீர், நில மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் காரணங்களால் இந்தவகை ஆமைகள் பேரழிவில் சிக்கி அழிய ஆரம்பித்தன.

இந்த இன ஆமைகளில் ஒரு பெண் ஆமையும், ஒரு ஆண் ஆமையும் ஷூஷோ விலங்கியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இதில் 90 வயதான பெண் ஆமை வயது மூப்பின் காரணமாக சனிக்கிழமையன்று உயிரிழந்துள்ளது. 

ஏற்கனவே, இந்த இனத்தைப் பெருக்குவதற்காக அந்த 90 வயது பெண் ஆமைக்கு செயற்கை விந்தணுவை செலுத்தி சோதனை செய்தனர் ஆராய்ச்சியாளர்கள். 5 முறை முயன்றும் கூட அந்த இனத்தைப் பெருக்க முடியவில்லை.

தற்போது, இந்த பெண் ஆமை இறந்தநிலையில் இன்னும் ஒரு ஆண் ஆமை மட்டுமே ஷூஷோ என்னும் சீன விலங்கியல் பூங்காவில் உள்ளது. மீதமுள்ள இரண்டு பாலினம் அறியப்படாத ஆமைகள் வியட்நாமின் காடுகளில் உள்ளதாம். ஒருவேளை, அந்த இரண்டும் ஆண் ஆமைகளாக இருந்தால், இந்த இனமே பூண்டோடு அழிந்துவிட்ட நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், செயற்கை விந்தணு செலுத்தியதுதான் பெண் ஆமையின் இறப்பிற்கு காரணமா என்கிற கேள்விக்கு பதிலளித்துள்ள வனவிலங்கு பூங்கா ஊழியர்கள், விந்தணு செலுத்தப்பட்ட பின்பும் அந்த பெண் ஆமை ஆரோக்கியமாக இருந்து வந்ததாகவும், மறுநாள் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மட்டுமே அது இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து மேற்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

NEXT STORY
உலகின் அரிதான ‘யாங்ட்ஷி’ மெல்லுடலி பெண் ஆமை உயிரிழப்பு! Description: பெண் ஆமை இறந்தநிலையில் இன்னும் ஒரு ஆண் ஆமை மட்டுமே ஷூஷோ என்னும் சீன விலங்கியல் பூங்காவில் உள்ளது.
Loading...
Loading...
Loading...