அரபிக் கடலில் உருவாகப் போகிறதாம் புதிய புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

செய்திகள்
Updated Jun 10, 2019 | 19:25 IST | Times Now

லட்சத்தீவு பகுதியை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இந்த குறைந்தழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு

tamil nadu, தமிழ்நாடு
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை  |  Photo Credit: Twitter

சென்னை: தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாகியுள்ளதாகவும், அது புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது.

அரபிக் கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் புயலாக தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

 

 

லட்சத்தீவு பகுதியை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இந்த குறைந்தழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவுகளின் அமினித் தீவிற்கு மேற்கு-வடமேற்கே 200 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கு-தென்மேற்கே 840 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மையம் கொண்டுள்ளது.

இது அடுத்த 72 மணி நேரத்தில் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

NEXT STORY
அரபிக் கடலில் உருவாகப் போகிறதாம் புதிய புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! Description: லட்சத்தீவு பகுதியை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இந்த குறைந்தழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு
Loading...
Loading...
Loading...