இந்தியாவில் முதல்முறையாக..குஜராத்தில் ‘டைனோசர்கள் மியூசியம்’!

செய்திகள்
Updated Jun 09, 2019 | 20:48 IST | Times Now

ரையோலி கிராமத்தில் 10000க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகளும் கண்டறியப்பட்டு, அவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

gujarat, குஜராத்
குஜராத் டைனோசர் மியூசியம்  |  Photo Credit: ANI

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் முதன்முறையாக டைனோசர்களுக்கான புதிய அருங்காட்சியகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் உள்ள பாலசினோர் அருகே அமைந்துள்ள கிராமம் ரையோலி. இங்கு உலகத்திலேயே மூன்றாவதாக மிகப்பெரிய புதைப்படிவங்களும், உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய டைனோசருக்கான எலும்புக்கூடு கண்டறியப்பட்டிருந்தது.

மேலும், ரையோலி கிராமத்தில் 10000க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகளும் கண்டறியப்பட்டு, அவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். இங்கு மட்டுமே 65 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகளை தொட்டு மகிழ பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

 

 

அப்பகுதி மக்களின் முப்பது ஆண்டுகள் போராட்டத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. குஜராத் மாநில சுற்றுலாத்துறை தற்போது டைனோசருக்கான அருங்காட்சியகத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அருங்காட்சியக கட்டுமான வேலை நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து அருங்காட்சியகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. 

இந்த அருங்காட்சியகத்தை அகமதாபாத்திலிருந்து விமானம் அல்லது ரயில் மூலம் பயணம் செய்து, அரை மணி நேர பயணத்தில் பாலசினோரை அடைந்து கண்டு ரசிக்கலாம்.  

NEXT STORY
இந்தியாவில் முதல்முறையாக..குஜராத்தில் ‘டைனோசர்கள் மியூசியம்’! Description: ரையோலி கிராமத்தில் 10000க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகளும் கண்டறியப்பட்டு, அவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.
Loading...
Loading...
Loading...