74 வயது ஆந்திர மூதாட்டிக்கு இரட்டை குழந்தை பிறந்தது

செய்திகள்
Updated Sep 06, 2019 | 10:43 IST | Times Now

திருமணம் ஆகி 54 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத நிலையில் தற்போது செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

Representative Image, பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்  |  Photo Credit: Getty Images

குண்டூர்: ஆந்திர பிரதேச மாநிலத்தில் 74 வயது மூதாட்டி ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்தள்ளது. செயற்கை கருத்தரிப்பு மூலமாக மங்கயம்மா எனும் பெயர் கொண்ட மூதாட்டிக்கு அகல்யா நர்சிங் ஹோம் எனும் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 80 வயது முதியவர் ராஜா ராவ் மற்றும் அவரது மனைவி மங்கயம்மா ஆகியோருக்கு 1962-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆகி 54 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத நிலையில் தற்போது செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

மங்கயம்மா கருத்தரிக்க தேவையான ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர் உமாஷங்கர் தலைமையிலான மருத்துவக் குழு கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து முதல் முயற்சியிலேயெ அவர் கருத்தரித்துவிட்டார். உலகிலேயே கருத்தரித்த மிக மூத்த பெண் என்ற பெருமை மங்கயம்மா அவர்களுக்கு கிடைத்துள்ளது.

ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற எந்த நோயும் மங்கயம்மாவிற்கு கிடையாது. மாதவிடாய் ஓய்வு அடைந்து பல ஆண்டுகள் கடந்த விட்ட போதும், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மூலம் ஒரு மாதத்திற்குள் அவரது மாதவிடாய் குழற்சியை மீண்டும் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர் மருத்துவர்கள்.

கடந்த 9 மாதங்களாக 10 மருத்துவர்கள் மங்கயம்மாவின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

2016-ல் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தலிஞ்சர் கவுர் என்பவர் தனது 70-வது வயதில் பிரசவித்தார். மங்கயம்மா பிரசவிக்கும் வரை உலகில் பிரசவித்த மிக மூத்தவர் என்ற பெருமை இவருக்கே சொந்தமாக இருந்தது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...