சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை பிரதமருடன் கண்டுகளிக்க 70 மாணவர்கள் தேர்வு!

செய்திகள்
Updated Sep 04, 2019 | 17:08 IST | Times Now

இஸ்ரோ தனது திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த MyGov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்டு 10 முதல் 25 வரை புதிர் போட்டி ஒன்றை நடத்தியது.

ISRO Headquarters, Bengaluru
இஸ்ரோ பெங்களூரு தலைமையகம்  |  Photo Credit: Twitter

பெங்களூரு: இஸ்ரோ நிறுவனம் ஆன்லைன் மூலமாக விண்வெளிப் புதிர் போட்டியை நடத்தி அதில்  70 மாணவர்களைத் தேர்வு செய்யதுள்ளது. இவர்கள் பிரதமர் மோடியுடன் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பெங்களூரில் உள்ள தலைமையகத்தில் இருந்து நேரலையில் காண இருக்கின்றனர். இவர்கள், ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து தலா 2 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த MyGov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்டு 10 முதல் 25 வரை புதிர் போட்டி ஒன்றை நடத்தியது. இதில், குறைவான நேரத்தில் சரியான பதில்களை அளித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

10 நிமிடங்களில் அதிகபட்சமாக 20 கேள்விகளுக்கு பதிலக்க வேண்டும் என்பதே இந்த போட்டியின் விதி. 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.30 மணி முதல் 2.30 மணிக்குள்ளாக லேண்டர் விக்ரம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இதனுள், நிலவின் மேற்பரப்பு மீது வலம்வரும் ரோவர் பிரக்யான் உள்ளது.

சந்திரயான் 2 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பட்டியலில் இந்தியாவும் இணையும். இருப்பினும், நிலவின் தென் துருவத்தில் தரையிரங்கும் முதல் திட்டம் என்ற பெருமை சந்திரயான் 2-ஐயே சாரும்.

NEXT STORY