ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல்: 63 பேர் பலி; 182 பேர் படுகாயம்

செய்திகள்
Updated Aug 18, 2019 | 14:01 IST | Times Now

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

Afghan's capital Kabul blast
Afghan's capital Kabul blast  |  Photo Credit: AP

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு நடந்த திருமண நிகழ்ச்சி மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 63 பேர் கொல்லப்பட்டனர். 182-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ள தருலமன் எனும் இடத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடந்தது. திருமணத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சியில் இசைக் கச்சேரியும் நடத்தப்பட்டது. அப்போது, இசைக் கச்சேரி நடந்துகொண்டிருந்த மேடை அருகே  திடீரென வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் உயிரிழந்தனர். மேலும், 182 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆப்கான் மாநில உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நஸ்ரதன் ரஹிமி கூறுகையில், காபூல் திருமண மண்டபத்தில் நேற்று இரவு 10.40 மணிக்கு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 63 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 182 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பெரும்பாலும் குழந்தைகளும், பெண்களும்தான். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...