மும்பையில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விபத்து:12 பேர் உயிரிழப்பு!

செய்திகள்
Updated Jul 16, 2019 | 15:31 IST | Times Now

மும்பையில் டோங்கிரி பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.

4 Storey building collapse in Mumbai
மும்பையில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து  |  Photo Credit: IANS

மும்பை: மும்பை டோங்கிரி பகுதியில் 4 மாடி உயர கட்டடம் இடிந்து விழுந்ததில் 12 பேர் உயிரிழந்த நிலையில்,40 பேருக்கு மேல் அதில் சிக்கிக்கொண்டுள்ளனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் டோங்கிரி பகுதியில் பராமரிப்பின்றி இருந்த பழம்பெரும் கட்டடம் இன்று காலை 11.40 மணி அளவில் இடிந்து விழுந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினரும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மட்டும் இன்றி  அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.   

Mumbai Building Collapse

இந்த கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், இந்த விபத்தில் 40 பேருக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் இருந்து மீட்கப்படுபவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல படுகின்றனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாக தெரியவில்லை.  

Mumbai Building Collapse   

மும்பையில் இது போன்ற பல கட்டடங்கள்  பாழடைந்த நிலையில் பராமரிப்பின்றி உள்ளன. அபாயகர நிலையில் உள்ளபோதும் மக்கள் தொடர்ந்து அதில் வசித்து வருகின்றனர். இந்த சம்பவத்தை பற்றி பேசிய மகாராஷ்டிர வீட்டு வசதி வாரிய தலைமை அதிகாரி உதய் சமந்து, இது போன்ற கட்டடங்களை சீரமைக்கும் பணியை ஒப்பந்ததார்களுக்கு கொடுத்ததாகவும், ஆனால் அவர்கள் எந்த வித வேலையையும் தொடங்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு தங்கள் பொறுப்பெடுத்து கொள்வதாகவும், இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  

Mumbai Building Collapse     

Mumbai Building Collapse 

மும்பையில் கனமழை பெய்து வருவதால், வலுவிழந்த கட்டடங்கள் விபத்துக்கு உள்ளாவது  தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்னதாக இதேபோல் கோவாண்டியில் உள்ள சிவாஜி நகரில் ஒரு கட்டடத்தின் மேல் மாடியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 8 பேர் காயமடைந்தனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...