3 வது கட்டத் தேர்தல்: பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது!

செய்திகள்
Updated Apr 21, 2019 | 10:34 IST | Times Now

நாடுமுழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் 3 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.

3 வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது!
3 வது கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது!  |  Photo Credit: Twitter

சென்னை : கேரளா, கர்நாடகா, குஜராத் உட்பட நாடுமுழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் 3 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனையொட்டி, அத்தொகுதிகளில் இறுதிகட்டப் பிரசாரத்தில் அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கான 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு வரும் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கேரளாவில் 20 தொகுதிகளுக்கும், குஜராத்தில் 26 தொகுதிகளுக்கும், கோவாவில் 2 தொகுகளுக்கும், அசாம் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், பீஹாரில் 5 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் 7 தொகுதிகளுக்கும், கர்நாடகாவில், மஹாராஷ்டிராவில் தலா 14 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 5 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீர், திரிபுராவில் தலா 1 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன் சேர்த்து யூனியன் பிரதேசங்களாற தத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றிற்கும் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

3 வது கட்டத் தேர்தலில் மொத்தம் ஆயிரத்து 600 க்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்த தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாத்தில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறகிறது.

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில், பிரியங்கா காந்தி நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கேரளாவில், இந்தமுறை ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

வயநாடு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நேற்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித்ஷா அத்தொகுதியில் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர், அங்கிருந்து அவர் கர்நாடக மாநிலத்திற்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். 3 வது கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

NEXT STORY
3 வது கட்டத் தேர்தல்: பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது! Description: நாடுமுழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் 3 வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
Loading...
Loading...
Loading...