தீவிரமடையும் வாயு புயல் - 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

செய்திகள்
Updated Jun 12, 2019 | 09:14 IST | Times Now

வாயு புயல் நாளை குஜராத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மூன்று லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். 

cyclone vayu
வாயு புயல் @ndmaindia | Photo Credit: Twitter  |  Photo Credit: Twitter

இந்தியா வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் அரபிக் கடலில் உருவான வாயு புயலால் வடக்கு குஜராத் பகுதிகளில் பலத்த காற்றுடன் இடி மின்னல் கூடிய மழை நாளையும் நாளை மறுநாளும் பெய்யக்கூடும். இந்த வாயு புயல் மிக தீவிரமான புயலாக மாறும். நாளை அதிகாலையில் மணிக்கு 140 கிமீ முதல் 165 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்த புயல் குஜராத் போர்பந்தர் மற்றும் மஹுவா பகுதிகளுக்கு நடுவே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் டியூ, அம்ரீலி, ஜுனாகத் போன்ற சௌய்ராஷ்ரா மாவட்டங்களில் பலத்த மழையும் ராஜ்கார், ஜாம்நகர், போர்பந்தர், துவாரகா, பாவ்நகர் ஆகிய இடங்களில் மிகவும் பலத்த பழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை குஜராத கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இன்று இரவுக்குள் அந்த வேகம் 110-120 கிமீ வேகமாக அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனால் பாதுகாப்பு கருதி குஜராத் மற்றும் டியூ ஆகிய இடங்களில் கடலோரத்தில் வசிக்கும் சுமார் மூன்று லட்சம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இன்று மதியத்துக்குள் மாற்றவுள்ளோம் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 39 தேசிய பேரிடர் படையினரும் 34 ராணுவப் படையினரும் மீட்புப் பணிகளுக்காக தயாரன நிலையில் இருக்கிறார்கள். 700 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களை அங்கே தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கேரளா ஒகி புயல், தமிழ்நாட்டில் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்துக்குப் பிறது ஓரிசாவிலும் ஃபானி புயல் மிகவும் கடுமையாகத் தாக்கியது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY