உத்தரப்பிரதேசம்: யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து; 29 பேர் பலி

செய்திகள்
Updated Jul 08, 2019 | 10:09 IST | Times Now

உத்தரப்பிரதேசம், யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 29 பேர் பலியாகினர்.

29 persons dead after a bus falls into canel on Yamuna Expressway
சாலை விபத்தில் 29 பேர் பலி  |  Photo Credit: ANI

ஆக்ரா: உத்தரப்பிரதேசம் மாநிலம் யமுனா எக்ஸ்பிரஸ்வே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து தடுப்பை உடைத்துக் கொண்டு கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பை உடைத்து கொண்டு கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் 29 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பேருந்தில் 40 பேர் பயணம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

NEXT STORY
உத்தரப்பிரதேசம்: யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து; 29 பேர் பலி Description: உத்தரப்பிரதேசம், யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 29 பேர் பலியாகினர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola