மதம் பிடித்ததால் பக்தர்களை தாக்கிய யானை; 18 பேருக்கு காயம் - வீடியோ!

செய்திகள்
Updated Sep 10, 2019 | 16:00 IST | Times Now

இலங்கையில் புத்தமத திருவிழாவில் யானை மதம் பிடித்து 18 பேரை காயப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இலங்கை திருவிழாவில் யானை தாக்கியதால் 18 பேருக்கு காயம், 18 people injured as elephant attacks in srilanka buddhist paegant
இலங்கை திருவிழாவில் யானை தாக்கியதால் 18 பேருக்கு காயம்  |  Photo Credit: YouTube

கொழும்பு​: இலங்கை கொழும்புவில் உள்ள கோட்டேவில் புத்தமத திருவிழாவில் அலங்கரிக்கப்பட்டிருந்த யானை மதம் பிடித்து தாக்கியதில் 18 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

கொழும்புவில் ஆண்டு தோறும் புத்தமத திருவிழா நடைபெறும். இதில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடைபெறும். அங்குள்ள சிலர் சொந்தமாக வளர்க்கும் யானைகளும் இதில் பங்கேற்கும். மேலும் கோயில் நிர்வாகம் சார்பிலும் யானைகள் பங்குபெறும். இதனை காண்பதற்காக மக்கள் லட்சக்கணக்கில் அங்கு வருவார்கள். அது போன்ற ஒரு நிகழ்வின் போது திடீரென ஒரு யானை ஓட தொடங்கியது. அதனை கண்டு அச்சமடைந்த மக்கள் சிலர் பக்கத்தில் இருந்த மற்றொரு யானை மீது சென்று மோதினர். இதனால் அந்த யானை மாதம் பிடித்து ஓடத் தொடங்கியது.

 

 

இதனால் அருகில் இருந்தவர்கள் யானையால் தாக்கப்பட்டார்கள். மேலும் அந்த யானை மீது அமர்ந்திருந்த யானை பாகன் அதனை கட்டுப்படுத்த முயன்றார். பின்னர் அவர் கட்டுப்பாட்டை இழந்து யானையின் காலுக்கு இடையிலே விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக யானை அவரை மிதிக்காததால் உயிர் தப்பினார். மேலும் அங்கிருந்த சில பொருட்களையும் அது சேதப்படுத்தியது. இந்த சம்பவத்தால் கிட்டத்தட்ட 18 பேர் காயமான நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 16 பேர் சிறு காயங்களால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் வயிற்று பகுதியில் காயத்துடன் ஒருவரும், காதில் காயத்துடன் ஒருவரும் மருத்துவமனையில் உள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரியவருகிறது.இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.      

இலங்கையில் சில நாட்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு விழாவில் எலும்பும் தோலுமாய் ஒரு யானை அணிவகுக்கப்பட்டது பெரும் சர்ச்சயை உண்டாக்கியது. உலகெங்கும் உள்ள விலங்கு நலன் அமைப்பினர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது யானையால் இலங்கையில் மீண்டும் ஒரு பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.      

              

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...