ஓங்கி ஒலித்த தமிழ், பெரியார்.. ஒருவர் மட்டும் வந்தே மாதரம்! நாடாளுமன்றத்தில் பதவியேற்ற தமிழக எம்.பிக்கள்!

செய்திகள்
விபீஷிகா
விபீஷிகா | Principal Correspondent
Updated Jun 18, 2019 | 13:09 IST

நேற்று பதவியேற்ற எம்பிக்கள் தத்தமது தாய்மொழியில் தான் பதவியேற்றுகொண்டர். அதனால் இன்றும் தமிழக எம்பிக்களும் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.

TamilNadu MPs
TamilNadu MPs  |  Photo Credit: Twitter

17-வது மக்களவைத் தேர்தல் முடிந்து சென்ற மாதம் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக கூட்டணி 353 இடங்களைக் கைப்பற்றியது. தமிழகத்தில் மொத்தம் 38 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. ஒரே ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றிபெற்றது. தேர்தல் முடிவுக்குப்பின் பிரதமராக மோடி இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். அதன்பிறகு அமைச்சர்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டு அவர்களும் பதவியேற்றுக் கொண்டனர். 

இந்நிலையில் நேற்று 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்றுதான் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றதற்காக எம்.பியாகப் பதவியேற்றார் மோடி. அவரைப்போலவே அமித்ஷா, ஸ்மிருதி இரானி, ராகுல்காந்தி உள்ளிட்ட 313 எம்பிக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சோனியா காந்தி கூட இன்றுதான் பதவிஏற்கிறார். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ள பா.ஜ.க எம்.பி வீரேந்திரக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று கனிமொழி, ஆ.ராசா, டி.ஆர்.பாலு, ஜோதிமணி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட அனைத்து தமிழக எம்பிக்களும்  பதவியேற்றனர்.. நேற்று பதவியேற்ற எம்பிக்கள் தத்தமது தாய்மொழியில் தான் பதவியேற்றுகொண்டர். அதனால் இன்றும் தமிழக எம்பிக்களும் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர். அனைவரும் பதவி ஏற்றபின் தமிழ் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்றும் சிலர் கலைஞர் வாழ்க ஸ்டாலின் வாழ்க என்றும் கூறி பதவியேற்றுக் கொண்டனர். தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பதவியேற்றபின் வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என்று கூறி கையொப்பமிட்டார். அதிமுகவின் ஒரே எம்.பியும் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வாழ்க எம்.ஜி.ஆர், வாழ்க அம்மா, வந்தே மாதரம், ஜெய் ஹிந்த் என்று கூறி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 

NEXT STORY
ஓங்கி ஒலித்த தமிழ், பெரியார்.. ஒருவர் மட்டும் வந்தே மாதரம்! நாடாளுமன்றத்தில் பதவியேற்ற தமிழக எம்.பிக்கள்! Description: நேற்று பதவியேற்ற எம்பிக்கள் தத்தமது தாய்மொழியில் தான் பதவியேற்றுகொண்டர். அதனால் இன்றும் தமிழக எம்பிக்களும் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola