ஏ.என்-32 விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழப்பு: விமானப்படை தகவல்!

செய்திகள்
Updated Jun 13, 2019 | 13:34 IST | Times Now

ஏ.என்-32 விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.

ஏ.என்-32 விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழப்பு
ஏ.என்-32 விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழப்பு  |  Photo Credit: Twitter

சியாங், அருணாச்சலப் பிரதேசம்: இந்திய விமானப்படை விமானம் ஏ.என்-32 விபத்துக்குள்ளான இடத்தை இன்று காலை சென்றடைந்த 15 பேர் கொண்ட மீட்புப் படையினர், அந்த இடத்தில் இருந்து உயிருடன் ஒருவரையும் மீட்கவில்லை. விமானத்தில் பயணத்தவர்கள் 13 பேரின் குடும்பத்தினருக்கு இதுகுறித்து ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த 15 பேர் கொண்ட மீட்புப் படையினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே ஹெலிகாப்டர் மூலம் நேற்று இறக்கி விடப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, விமானப்படை போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளான இடத்தை மீட்புப் படையினர் அடைந்த முதல் காட்சிகள் இன்று வெளியாகியுள்ளன.

மலையேற்ற வீரர்கள் உள்ளிட்டவர்களை உள்ளடக்கிய விமானப் படையின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர், ஜூன் 3 ஆம் தேதி விமானம் விபத்துக்குள்ளான அடர்ந்த காட்டுப் பகுதியில் தேடுதல் நடத்தினர். இதனைத்தொடர்ந்து, விமானம் விபத்துக்குள்ளானதை உறுதி செய்துள்ள தேடுதல் படையினர், உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் விபத்துக்குள்ளான பகுதி மிக அடர்ந்த காட்டுப் பகுதி என்பதாலும், மலைப் பகுதியில் 12 ஆயிரம் அடி உயரத்தில் இருப்பதாலும் மீட்புப் பணிகள் முழுமையாக நிறைவடைய சற்று தாமதம் ஏற்படலாம் எனவும் விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NEXT STORY
ஏ.என்-32 விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழப்பு: விமானப்படை தகவல்! Description: ஏ.என்-32 விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டதாக விமானப்படை தகவல் வெளியிட்டுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles