பீகார்: மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி எண்ணிக்கை 108 ஆக உயர்வு

செய்திகள்
Updated Jun 18, 2019 | 13:51 IST | Times Now

பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வரும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Acute Encephalitis Syndrome (AES) in Bihar's Muzaffarpur has reached 108
மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்  |  Photo Credit: PTI

பாட்னா: பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான குழந்தைகள் மூளைக்காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே முசாஃபர்பூர் கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 89 குழந்தைகள் சிகிச்சையின்போதே உயிரிழந்துவிட்டனர். அங்குள்ள கெஜ்ரிவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 108 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் 290-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையேலில் குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக தானாக வழக்கு பதிவு செய்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத் துறைக்கும், பீகார் மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

நாளுக்கு நாள் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வரும் விவகாரம் பீகாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் சூழலில் சம்பவம் நடந்த பகுதிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் 17 நாட்களுக்கு பிறகு இன்று ஆய்வு மேற்கொள்ளச் செல்கிறார். 

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட பீகார் சுகாதாரத்துறை அமைச்சர் மங்கள் பாண்டே, அங்கிருந்தவர்களிடம் எத்தனை விக்கெட் போச்சு என கேள்வி எழுப்பினார். அதற்கு ஒருவர் 4 விக்கெட் என பதிலளித்தார். கூட்டம் நடந்த நேரத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தது. குழந்தைகள் இறப்பு விஸ்வரூபம் எடுத்து வரும் சூழலில் அமைச்சருக்கு கிரிக்கெட் குறித்து கவலை என அங்கிருந்தவர்கள் புலம்பித் தீர்த்தனர்.

அதேபோல், குழந்தைகள் உயிரிப்பு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் தூங்கி விழுந்தார். குழந்தைகள் உயிரிழப்பு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் இவர்கள் அலட்சியமாக நடந்து கொண்டது அனைவரையும் கவலை அடையச் செய்துள்ளது. 

NEXT STORY
பீகார்: மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் பலி எண்ணிக்கை 108 ஆக உயர்வு Description: பீகார் மாநிலத்தில் நாளுக்கு நாள் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்து வரும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles