பீகார் தலைநகர் பாட்னாவில் வெள்ளநீருக்கு மத்தியில் சிகப்பு நிற ஆடையில் காட்சிதரும் இளம்பெண் ஒருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பீகார் தலைநகர் பாட்னாவில் வெள்ளநீருக்கு மத்தியில் சிகப்பு நிற ஆடையில் காட்சிதரும் இளம்பெண் ஒருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கனமழை காரணமாக பீகாரில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
பாட்னா நகரம் வெள்ளத்தால் முடங்கியுள்ள நிலையில் மக்கள் படும் சிரமத்தை ஏளனம் செய்வது போல இப்பகைப்படங்கள் இருப்பதாக சிலர் விமர்சித்து வருகின்றன.
சௌரவ் அனுராஜ் என்பவர் இப்புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் தோன்றும் இளம்பெண் யாரென்று பலரும் விவாதித்து வரும் நிலையில், அவ பெயர் அதிதி சிங் என்பது தெரியவந்துள்ளது.
’பேரிடரில் கடற்கன்னி’ (Mermaid in Disaster) எனும் தலைப்பில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
நிஃப்ட் எனப்படும் தேசிய ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்ப கல்லூரியில் அதிதி சிங் பயின்று வருகிறார்.
பாட்னா நகரின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் விதமாகவே தாம் இப்புகைப்படங்களை எடுத்ததாகக் கூறும் புகைப்படக் கலைஞர் சௌரவ் அனுராஜ், யாரும் இதனை தவறாக எட்டுத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்!
பல்லாயிரம் லைக்குகளை குவித்து வரும் இப்புகைப்படங்களை விமர்சித்துவரும் இவ்வேளையில் இப்புகைப்படங்களை ரசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கழிவுநீர் கலந்த வெள்ளநீருக்கு மத்தியில் புகைப்படங்களை எடுத்தது எளிதான செயல் அல்ல என்று கூறும் சௌரவ் அனுராஜ், மக்கள் படும் துயரத்தை தமது பாணியில் வெளியிப்படுத்தியுள்ளதாகக் கூறி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.