வெந்தயத்தில் இரும்புசத்து, பொட்டாசியம், கேல்சியம், புரதம் உள்ளது. செரிமானப் பிரச்னைகள்களை சரிசெய்கிறது. உடல்சூட்டைத் தனிக்கிறது. மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களைக் கட்டுப்படுத்துகிறது. photo credits: (Pixabay)
வெந்தயத்தில் இரும்புசத்து, பொட்டாசியம், கேல்சியம், புரதம் உள்ளது. செரிமானப் பிரச்னைகள்களை சரிசெய்கிறது. உடல்சூட்டைத் தனிக்கிறது. மார்பகப் புற்றுநோய் உருவாக்கும் செல்களைக் கட்டுப்படுத்துகிறது. photo credits: (Pixabay)
கற்றாழை ஆண்டி-பேக்டீரியல், ஆண்டி-ஃபங்கல், ஆண்டி-பேக்டீரியல் தன்மையுடையது.உணவின் ஆல்-இன்-ஆல் அழகுராஜா கற்றாழையாகத்தான் இருக்கும். உடல் சூடு தனிய, சரும வறட்சி போக்க, அடர்த்தியாக கூந்தல் பெற, மலச்சிக்கல் நீங்க, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த, அல்சர் குணமாக என கற்றாழை எண்ணற்ற பயன்களைத் தருகிறது. photo credits: (Pixabay)
வாழைப்பழத்தில் மெக்னீஷியம், பொட்டாஷியம், ஃபைர், வைட்டமின் பி6, சி அதிகம் உள்ளன. இதனால் உடலுக்கு உடனசி எனர்ஜி கிடைக்கிறது. photo credits: (Pixabay)
தயிரில் உள்ள நல்ல பேக்டீரியா, மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறது. மேலும் மூளையில் இருந்து வயிற்றுக்குச் செல்லும் நரம்பை தூண்டி மன அழுத்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. ஷார்ட்- டெம்பர் வருபவர்கள் குறிப்பாகப் பெண்கள் கண்டிப்பாக தினமும் தயிரை உட்கொள்வது நல்லது. கடைகளில் கிடைக்கும் ஃப்ளேவர்டு தயிரை உபயோகிக்காமல் வீட்டிலேயே தயார் செய்யவும். photo credits: (Pixabay)
தேங்காய் எண்ணைய் தைராய்டு செயல்பாட்டை சீராக செயல்பட வைக்கிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாகுகிறது.தேவையற்ற கொழுப்பை நீக்கி நமது வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது மற்றும் நமது சருமத்தைப் பளபளக்கச்செய்கிறது. முடிவளரவும் உதவுகிறது. photo credits: (Pixabay)
வெள்ளரிக்காயில் 90% நீர் இருக்கிறதென்றாலும், அதில் வைட்டமின் கே,சி, பி5, மேன்கனீஸ், பொட்டாஷியம்,மெக்னீஷியம் உள்ளன. தினமும் வெள்ளரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் உருவாவதைக் கட்டுப்படுத்தும். இருதய நோய் வருவதையும் குறைக்கிறது. வெள்ளரிக்காயை ஜூஸாகவோ, சாலட்டாகவோ உட்கொள்ளலாம். photo credits: (Pixabay)
எலும்பு சூப்பில் பாஸ்பரஸ், கேல்சியம், இளமையைத் தரும் கொலாஜன், மற்றும் பல சத்துகள் அடங்கி இருக்கின்றன. மிகவும் மிதமான சூட்டில் நல்லி எலும்புகளை தண்ணீரில் வேகவைத்து,கொதிக்கவைத்து, அந்த சூப் கொழகொழப்புத் தன்மை வரும் வரை சமைத்து பருகவேண்டும். சளி,ஜலதோஷம் போக்குகிறது. மூட்டுவலி வருவதைக் குறைக்கிறது. நகம், முடிவளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சிறுவயதிலேயே எலும்பு சூப்பைப் பருகிவர வலுவான எலும்புகள் நமக்கு கியாரண்டி! photo credits: (Pixabay)