உலக சைக்கிள் தினம்: சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 5 சிறந்த நன்மைகள்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Jun 03, 2019 | 15:17 IST | Times Now

சைக்கிளிங் செய்வது உடலை சீராகவும், கட்டுடனும் வைக்க உதவுவது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது.

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 5 சிறந்த நன்மைகள்
சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் 5 சிறந்த நன்மைகள்  |  Photo Credit: Thinkstock

சென்னை: ஜூன் 3 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக சைக்கிள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சைக்கிள் ஓட்டுவதன் தனித்துவம் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நடைபயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்வது இருதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதுடன், உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோயாள் சிறப்பான வாழ்க்கையை வாழ உதவுவதை ஊக்கப்படுத்தவும் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

சைக்கிளிங் செய்வது உடலை சீராகவும், கட்டுடனும் வைக்க உதவுவது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது. தினந்தோறும் சைக்கிளிங் செய்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன. வேலைக்குச் செல்லும்போதும், பள்ளி மற்றும் பூங்காக்களுக்கு செல்லும்போதும் சைக்கிளில் செல்வதை வாடிக்கையாகக் கொண்டால் எளிமையாக அமையும். சைக்கிளிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்.

சைக்கிளிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

உடல் எடை குறைப்பு: சைக்கிளிங் செய்வது உடல் எடையை குறைக்க உதவுவதுடன், கட்டுக்கோப்புடன் வைக்கவும் உதவுகிறது. ஒரு மணிநேரம் சைக்கிளிங் செய்வதால் 400 முதல் 1000 கலோரி எடையை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. எனினும், எவ்வளவு வேகமாக ஓட்டுகிறார்கள் என்பதும், உடல் எடையைப் பொறுத்தும் இது அமையும்.

இருதயத்திற்கு உகதந்தது: சைக்கிளிங் செய்வது இருதய தசைகளை பலப்படுத்த உதவுகிறது. மேலும் கொழுப்பையும் குறைக்கிறது.

புற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்க: சைக்கிளிங் செய்வதால் சில வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.

சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது: உடல் உழைப்பு குறைவாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பின்லாந்து நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தினமும் 30 நிமிடம் வரை சைக்கிளிங் செய்பவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 40 சதவிகிதம் குறைவதாகத் தெரிய வந்துள்ளது.

மனதை சீராக வைக்க: சைக்கிளிங் செய்வது மனதை மகிழ்ச்சியுடன் வைக்க உதவுவதுடன், ஒட்டுமொத்த மனநிலையை சீராக்கவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, உலக சைக்கிள் தினமான இன்று அனைவரும் உடற்பயிற்சி செய்யவும், சைக்கிளிங் போன்ற உடலுக்கு ஏற்ற பயிற்சிகளை மேற்கொள்ளவும் உறுதி ஏற்போம்.

NEXT STORY