இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 100 நகரங்களில் ஸ்விக்கி சேவை விரிவாக்கம்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Oct 08, 2019 | 13:54 IST | Times Now

இந்தியாவில் பிரதான நகரங்கள் செய்ல்படும் ஸ்விக்கி இனி மூன்றாம், நான்காம் அடுக்கு நகரங்களில் காலூன்ற திட்டமிட்டுள்ளது

மேலும் 100 நகரங்களில் ஸ்விக்கி விரிவாக்கம்,Swiggy aims to add 100 more cities by this year
மேலும் 100 நகரங்களில் ஸ்விக்கி விரிவாக்கம்  |  Photo Credit: Twitter

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தங்களது சேவையை மேலும் 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளது.   

கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்விக்கி நிறுவனம் இந்தியாவில் பல முன்னணி நகரங்களில் அதன் சேவையை வழங்கி வருகிறது. முதலில் உணவு டெலிவரி சேவையை அளித்த ஸ்விக்கி, பின்னர் மளிகை பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றை டெலிவரி செய்யும் 'ஸ்விக்கி ஸ்டோர்ஸ்' எனும் சேவையை தொடங்கியது. பின்னர் கடந்த மாதம் எந்த பொருளையும் குறிப்பிட்ட இடத்திற்கு டெலிவரி செய்யும் 'ஸ்விக்கி கோ' சேவையையும் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஸ்விக்கி தங்களது சேவையை கூடுதலாக 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளது. நாடு முழுவதும் தற்போது 500 நகரங்களிலும் 75 பல்கலைக்கழகத்திலும் செயல்பட்டு வரும் ஸ்விக்கி, டிசம்பர் மாதத்திற்குள் 600 நகரங்களிலும் 200 பல்கலைக்கழகத்திலும் விரிவாக்கப்படவுள்ளது. தற்போது இந்தியாவில் பிரதான நகரங்களில் செயல்படும் ஸ்விக்கி இனி மூன்றாம், நான்காம் அடுக்கு நகரங்களில் காலூன்ற திட்டமிட்டுள்ளது. இதனால் அங்கு செயல்பட்டு வரும் உணவகங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி 1.4 லட்சம் உணவகங்கள் ஸ்விக்கியுடன் இணைப்பில் இருந்த நிலையில், தற்போது கடந்த ஆறு மாதங்களில் மேலும் 60,000 புதிய உணவகங்கள் இணைந்துள்ளது.          

NEXT STORY