தேன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்! இங்கே பார்க்கலாம்

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Apr 12, 2019 | 07:25 IST | Times Now

தேனை பயன்படுத்தி பல்வேறு வகையான நோய்களுக்கு எப்படி தீர்வு காணலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

Some amazing health benefits of honey, தேனின் மருத்துவ குணங்கள்
தேனின் மருத்துவ குணங்கள்  |  Photo Credit: Times Now

இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகளை தந்துள்ளது. அதில் தேன் ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும். பழங்காலம் தொட்டே தேனை நாம் பயன்படுத்தி வருகிறோம். குழந்தைகள் இருக்கும் எல்லா வீடுகளிலும் தேனை வைத்திருப்பது அவசியம். தேன் மூலம் பல நோய்களை குணப்படுத்த முடியும். 

தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என கூறுவதும் உண்டு. 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது. ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பது தேன் தான்.

மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம்  இருப்பதால்,  மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது.. 

தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

1.விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. 

2.குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.

3.கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

4.இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை  அருந்தினால், வாந்தி, குமட்டல்,  ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

5.தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

6.தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

7.மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால் 
மூட்டுகள் வலிக்காது. தேயாது.

8.தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

9.தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும் 

10. தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.

NEXT STORY