பச்சை தங்கம் "கொத்தமல்லி" இலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா !

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Jun 30, 2019 | 21:50 IST | Times Now

கொத்தமல்லி இலைகளில் பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது.

six benefits of Coriander
six benefits of Coriander   |  Photo Credit: Twitter

கொத்தமல்லி இலைகளில் பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது. 

பச்சை தங்கம் என்று கூறப்படும் கொத்தமல்லி சிறந்த மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. உடல் நலத்திற்கு பல அறிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகை கொத்தமல்லி இலை. ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட கொத்தமல்லி இலைகளை குடும்பத் தலைவிகள் அன்றாடம் சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த கொத்தமல்லியை சமையலில் சேர்க்காதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம். 

உணவை அலங்கரிக்கவும், கம கமவென வாசனைக்காகத்தான் பயன்படுத்தி வருகிறோம் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இதன் மருத்துவ குணத்தை பற்றி தெரிந்திருந்த நம் முன்னோர்கள் சமையலில் தவறாது கொத்தமல்லி இலைகலளை சேர்த்து வந்துள்ளனர். 

கொத்தமல்லி இலைகளில் பல்வேறு வைட்டமின்கள், கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் விதை, காரம், கசப்பு, துவப்பு, இனிப்பு என 4 விதமான சுவைகளை கொண்டது. 

  1. உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு
  2. புளித்த ஏப்பம்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது
  3. வாய்ப்புண்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது
  4. கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும்.
  5. கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து கொத்தமல்லியைச்  சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும்
  6. தினமும் நாம் உண்ணும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லியை சேர்த்து வந்தால் நோயற்ற ஆரோகியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழலாம்.
NEXT STORY