பேய் உடன் உறங்க ஆசையா? இங்கிலாந்து சிறையில் காத்திருக்கும் திகில் அனுபவம்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Sep 02, 2019 | 16:45 IST | Times Now

இந்த சிறைச்சாலையில் நீங்கள் தனியாகத் தங்க விரும்பமாட்டீர்கள். தாழ்வாரத்திலும் நடைபாதையிலும் காலடி ஓசை கேட்கிறது. இரவு நேரங்களில் அமானுஷ்ய உருவங்கள் அங்கும் இங்குமாய் அலைகின்றன.

Shepton Mallet Prison, ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலை
ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலை  |  Photo Credit: Twitter

இங்கிலாந்து நாட்டின் ’திகில் சிறை’ என அறியப்படும் ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலையில் இரவுப் பொழுதை கழிக்க தற்போது பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கொடூரமான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த இந்த சிறைச்சாலை 2013-ஆம் ஆண்டில் நிரந்தரமாக மூடப்பட்டது.

தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள சமர்செட் பகுதியில் அமைந்திருக்கும் ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலை 1625-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 1950 முதல் குற்றவாளிகள் பலருக்கு இங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இப்படிப்பட்ட இடத்தை தற்போது தனியார் நிறுவனம் ஒன்று இரவு விடுதியாக மாற்றியுள்ளது.

அந்நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் சிறைச்சாலையில் ஒரு முழு இரவை கழித்தனர். அவ்விருவரில் ஒருவர் தனது அனுபவம் குறித்து பகிரும்போது, ”சிறையில் என்னுடன் இருந்தவர் திடீரென எழுந்து ஓடினார். என்னவென்று கேட்டதற்கு, யாரோ சத்தமாக உறுமுவது போன்ற சத்தம் கேட்டதாகக் கூறினார். ஆனால் நாங்கள் இருவர் மட்டுமே அங்கு இருந்தோம்,” என்றார்.

அமானுஷ்ய அனுபவங்களை விரும்புவோர் ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலையில் தங்க https://www.bitnparanormal.co.uk/ என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 6:30 மணி வரை தங்க அனுமதி உண்டு.

ஷெப்டான் மால்லெட் சிறைச்சாலை குறித்து அந்த இணையதளத்தில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது: ஆயிரக்கணக்கானவர்கள் புதைந்திருக்கும் இந்த சிறைச்சாலையில் நீங்கள் தனியாகத் தங்க விரும்பமாட்டீர்கள். தாழ்வாரத்திலும் நடைபாதையிலும் காலடி ஓசை கேட்கிறது. இரவு நேரங்களில் அமானுஷ்ய உருவங்கள் அங்கும் இங்குமாய் அலைகின்றன.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...