நல்லவராக இருந்தும் சிங்கிளாக இருக்கிறீர்களா? காரணங்கள் இவை தான்...

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Nov 08, 2019 | 10:54 IST | Times Now

’எல்லாம் இருந்தும் ஏன் நமக்கு ஒரு வாழ்க்கை துணை அமையவில்லை?’ என்ற கேள்வி உங்கள் மனதில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது என்றால், இந்த கட்டுரை உங்களுக்கானது.

Reasons you're single despite being perfect, நல்லவராக இருந்தும் சிங்கிளாக இருக்க காரணங்கள்
நல்லவராக இருந்தும் சிங்கிளாக இருக்க காரணங்கள் 

ஒரு நல்ல வாழ்க்கை துணைக்கு தேவையான எல்லா தகுதிகளை பெற்றிருந்தும் நீங்கள் சிங்கிளாகவே இருக்கிறீர்களா? நீங்கள் நேர்மையானவர், அன்பானவர், ஏன் அழகானவரும் கூட. இருப்பினும், உங்களுக்கான வாழ்க்கை துணை அமைவதில் தாமதம் ஏற்படலாம்.

’எல்லாம் இருந்தும் ஏன் நமக்கு ஒரு வாழ்க்கை துணை அமையவில்லை?’ என்ற கேள்வி உங்கள் மனதில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது என்றால், இந்த கட்டுரை உங்களுக்கானது. சிங்களாக இருப்பதில் உங்களுக்கு சிரமம் ஏதும் இல்லை என்றாலும், ’மற்றவர்கள் போல் அல்லாமல் நாம் மட்டும் ஏன் சிங்களாக இருக்கிறோம்?’ என்று சில சமயங்களில் நினைக்க தோன்றும்.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. எனவே, சிங்களாக இருப்பதன் சாதக பாதகங்கள் குறித்து நாம் இங்கு பேசவில்லை. சிங்கிளாக இருப்பதன் காரணங்கள் மட்டுமே இங்கு விவரிக்கப்படுகிறது. அவற்றை தற்போது காணலாம்.

  1. சரியான நபருக்காக காத்திருக்கிறீர்கள்: புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது போல, சரியான துணைக்காக எத்தனை காலம் வேண்டுமானாலும் காத்திருக்க நீங்கள் தயாராக இருப்பீர்கள். சரியான நபரை தேர்ந்தெடுக்க தெரியாதவராகவும் நீங்கள் இருக்கக்கூடும். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரமாக முடிவு எடுக்காமல், உங்களுக்கேற்ற சரியான நபர் கண்ணில் படும் வரை காத்திருக்கவே விரும்புவீர்கள்.
  2. ’செட்டில்’ ஆகும் எண்ணம் இல்லை: காதலிக்க விரும்பினாலும் கழுத்தில் மாலையிட தயங்குவீர்கள். சிங்கிளாகவே இத்தனை காலம் வாழ்ந்துவிட்டதால் இந்த தயக்கம் ஏற்படக்கூடும். காதலித்தோமா, கல்யாணம் செய்தோமா என்று வாழ்க்கையை நகர்த்தி கொண்டே செல்லாமல், நின்று நிதாரணமாக அனுபவித்து வாழ விரும்புகிறீர்கள்.
  3. அதற்கெல்லாம் நேரமில்லை: எந்நேரமும் வேலை என சுழன்று கொண்டிருப்பவர்களுக்கு காதலை தேடிச் செல்ல நேரம் இருக்காது. வாழ்க்கையை இப்படித்தான் வாழவேண்டும் என்று உறுதியான எண்ணம் கொண்ட நீங்கள், காதலுக்காக உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை.
  4. உங்களை பார்த்தாலே பயம்! உங்களை பார்த்தாலே பலர் பயப்படுவது போல நீங்கள் உணரலாம். குறிப்பாக, தைரியமான பெண்களைக் கண்டால் சில ஆண்களுக்கு பயம் ஏற்படும். நீங்கள் கெத்தாக இருப்பதால் உங்களைக் காணும் ஆண்கள் தாழ்வு மனப்பான்மை காரணமாக விலகி நிற்பர். அதே போல, பெண்களை அணுக தயங்கும் ஆண்களும் சிங்கிளாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
  5. இந்த காலத்தில் உண்மையான காதலா? காதல், கல்யாணம் இவற்றில் நம்பிக்கை இல்லாதவராக நீங்கள் இருக்கலாம். முன்பு இருந்த உறவுமுறைகள் இன்றைய நவீன யுகத்தில் மாற்றம் கண்டிருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். எனவே, இன்று இருக்கும் காதலில் துன்பங்களும், அலைச்சல்களுமே அதிகம் என்று உறுதியாக நம்புகிறவர் நீங்கள்.
NEXT STORY