நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் நோயாகும். நிமோனியா உள்ளவர்களுக்கு நுரையீரலில் இருக்கும் சிறிய காற்றுப் பைகளில் சீழ் பிடிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படும். எல்லா வயதினரையும் பாதிக்கும் இந்நோய், 2 வயதிற்கு குறைவானோர் மற்றும் 60 வயதிற்கு அதிகமானோரை பாதிக்க அதிக வாய்ப்புண்டு.
இருமல், முச்சுத்திணறல், காய்ச்சல், மூச்சு வாங்குதல், அசதி, வாந்தி, சுவாசிக்கும் பொழுதும் இருமும் பொழுதும் நெஞ்சு வலி, பசியின்மை, மலச்சிக்கல் ஆகியவை நிமோனியாவின் அறிகுறிகள் ஆகும்.
நிமோனியா ஏற்பட பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஃபங்கஸ் கிருமிகள் காரணமாக இருக்கலாம். மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், பொது இடங்கள் ஆகிய இடங்களில் நிமோனியா நோய் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. சுவாசக்கருவிகள் பயன்படுத்துதல், உணவு மற்றும் எச்சிலை சுவாசிப்பதால் கூட நிமோனியா தாக்க வாய்ப்புள்ளது.
நிமோனியாவை குணப்படுத்த மருத்துவ சிகிச்சை அவசியமாகும். மருத்துவ சிகிச்சை பெறுவதுடன், நிமோனியா அறிகுறிகளை கட்டுப்படுத்த வீட்டில் உள்ள சில பொருட்கள் நிவாரணியாக செயல்படும். அவை கீழ்வருமாறு:
பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.